இந்த ஜூன் முதல், அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் மூன்று மாதங்களுக்குச் சம்பளம் எடுக்க மாட்டார்கள் என்று பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார்.
நேற்றிரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட RM40 பில்லியன் பெமெர்காசா பிளஸ் உதவி தொகுப்பை அறிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
“ஜூன் 2021 முதல் மூன்று மாதங்களுக்குச் சம்பளம் எடுக்காததன் மூலம், அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் நாட்டிற்கு அவர்களின் ஆதரவைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
“செலுத்தப்படாதச் சம்பளம், கோவிட் -19 தொடர்பான செலவுகளுக்கு நிதியளிக்க பேரழிவு அறக்கட்டளை கணக்கில் சேர்க்கப்படும்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பி.கே.பி. 1.0 அமல்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, கோவிட் -19 நிதியில் பங்களிப்பு செய்ய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் சம்பளத்திலிருந்து இரண்டு மாத விலக்குடன் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த மே 12 தொடங்கி, நாடு பி.கே.பி. 3.0-இன் கீழ் உள்ளது.
இருப்பினும், தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நள்ளிரவு முதல் ஜூன் 14 வரை 14 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு கதவடைப்பைச் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது – சரவாக் தவிர.