கடன் ஒத்திவைப்பு : ‘வங்கிகளைக் கட்டாயப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை’ – வழக்கறிஞர் மறுப்பு

கடன் வாங்கியவர்களுக்கு ஒரு விரிவான கடன் ஒத்திவைப்பை வழங்குமாறு, வங்கிகளைக் கட்டாயப்படுத்தும் சட்ட அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்று கூறியுள்ள நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஸீஸின் அறிக்கையை வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா மறுத்தார்.

அவசரகால நிலை இன்னும் நடைமுறையில் இருப்பதால், அரசாங்கம் அவசரகால விதிமுறைகளை மட்டுமே செய்ய வேண்டும், அது அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்று கூறினார்.

அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, அரசாங்கம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளது, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் செலவினங்களை அங்கீகரித்தது, கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவுமானால் தனியார் சொத்துக்களைக் கையகப்படுத்த அனுமதித்தது என்று அவர் குறிப்பிட்டார்.

“இவை அனைத்தும் தவறாகத் தோன்றினாலும் அனுமதிக்கப்படுகின்றன. நிச்சயமாக, சமன்நிலை எதுவும் இல்லை, ஆனால் அது அவசரகாலத்தில் அனுமதிக்கப்படுகிறது.

“எனவே, அவர் (தெங்கு ஜஃப்ருல்) தங்களுக்கு (அரசாங்கத்திற்கு) அதிகாரம் இல்லை என்று சொல்வது உண்மையல்ல. அது தவறு என்று நான் வலியுறுத்துகிறேன். அது மக்களுக்களிடம் கூறப்படும் ஒரு பொய்,” என்று அவர் நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அனைத்து நிதி சேவைகளும் அதன் கட்டணங்கள், தாமதமாகச் செலுத்தும் அபராதம் மற்றும் பலவற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று விதிக்கும் விதி “ஓர் எளிய விதி” என்று அவர் கூறினார்.

“இந்த வழியில், எந்தவொரு நிபந்தனையின்கீழ் கடன் கொடுப்பனவுகளுக்கு தடை விதிக்குமாறு வங்கிகளை அரசாங்கம் கட்டாயப்படுத்த முடியும், தேவைப்பட்டால் இது சில வசதிகளுக்கு மட்டுப்படுத்தப்படலாம்,” என்று அவர் கூறினார்.

மே 31 அன்று, பிரதமர் முஹைதீன் யாசின் பெமெர்காசா பிளஸ் எனப்படும் RM40 பில்லியன் மதிப்புள்ள பொருளாதார உதவியைத் தொடங்கினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், முழு கதவடைப்புக்கு முன்னதாக இந்த உதவி அறிவிக்கப்பட்டது, அதில் B40 குழுவிற்கும், வேலை இழந்தவர்களுக்கும், செயல்பட முடியாத சிறு தொழில்களுக்கும் ‘முழு கதவடைப்பின்’ போது கடன்களுக்கான தடை அல்லது ஒத்திவைப்பு வழங்கப்பட்டது.

இது மார்ச் 2020-இல், நாடு முதன்முதலில் பி.கே.பி.யின் கீழ் இருந்தபோது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான ஒட்டுமொத்த தடைக்கு முரணானது.

முழு பி.கே.பி. கட்டுப்பாடுகள் அனைவரையும் பாதிக்கும் என்பதால், அரசாங்கம் ஏன் விரிவான கடன் ஒத்துவைப்பை விதிக்கவில்லை என்று அம்னோ தலைவர் புவாட் ஸர்காஷி கேள்வி எழுப்பினார்.

நேற்று தனது விளக்கத்தில், தெங்கு ஜஃப்ருல், வங்கிகளுக்கும் தேசிய வங்கிக்கும் இடையிலான கலந்துரையாடல்களின் விளைவாக இலக்கு வைக்கப்பட்ட கடன் ஒத்திவைப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

ஒரு விரிவான தடையை வழங்குமாறு, வங்கிகளைக் கட்டாயப்படுத்த அரசாங்கத்திற்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.