கோவிட் 19 | நாட்டில் இன்று, 5,271 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இது தொடர்ச்சியாக நான்கு நாட்களில் பதிவான புதிய நேர்வுகளின் சரிவு மற்றும் மூன்று வாரங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.
இருப்பினும், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளது, 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் 82 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,460 பேர் பலியாகியுள்ளனர்.
சிலாங்கூர் (23) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து, ஜொகூர் (17), நெகிரி செம்பிலான் (11), கோலாலம்பூர் (8), கெடா (5), சரவாக் (4), பேராக் (4), கிளந்தான் (4) மற்றும் லாபுவான் (2) எனப் பதிவாகியுள்ளன.
இன்று 7,548 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 447 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 1,374, சரவாக் – 703, நெகிரி செம்பிலான் -571, கோலாலம்பூர் – 455, ஜொகூர் – 355, கிளந்தான் – 341, சபா – 336, லாபுவான் – 209, கெடா – 194, மலாக்கா – 178, பேராக் – 177, பினாங்கு – 153, திரெங்கானு – 117, பஹாங் – 99, புத்ராஜெயா – 8, பெர்லிஸ் – 1.
மேலும் இன்று, 23 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.