புதியப் பிரதம வேட்பாளராக, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைனை ஆதரித்து, பாஸ்-உடன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்திகளைச் சபா வாரிசான் கட்சி இன்று மறுத்துள்ளது.
வாரிசான் தலைமைச் செயலாளர் லோரெட்டோ படுவா ஜூனியர், இந்த அறிக்கை உண்மையல்ல என்று மறுத்ததோடு, அது குறித்து போலீஸ் புகார் செய்யவுள்ளதாகவும் சொன்னார்.
அந்தக் கூட்டு அறிக்கை, அவரது கையொப்பத்தையும் பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹாசனின் கையொப்பத்தையும் கொண்டுள்ளது.
ஜூன் 11-ம் தேதியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையில், பாஸ் கட்சியின் கடிதத்தாளில் வாரிசான் மற்றும் பாஸ் பொதுச் செயலாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
“எந்தவொரு நபரையும் பிரதமராக ஆதரிக்க, பாஸ்-உடன் எந்தவொரு ஒருமித்த ஒப்பந்தத்தையும் ஒப்புக்கொள்ளவோ அல்லது கையெழுத்திடவோ, நான் ஒருபோதும் வாரிசான் சார்பாகவோ அல்லது எனது தனிப்பட்ட திறனுடனோ செய்ததில்லை.
“அந்த ஊடக அறிக்கையுடன், வாரிசானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
லொரெட்டோவைப் பொறுத்தவரை, அது அதிகாரத்தின் மீது மிகவும் பசியுள்ள சிலரின் செயல்களாகும், அவர்கள் அவதூறுகளைப் பரப்பவும் பொய்யுரைக்கவும் தயாராக உள்ளனர் என்றார்.
முன்னதாக இன்று, லோரெட்டோ மற்றும் தக்கியுடின் இருவரும் கையெழுத்திட்ட பாஸ் சின்னத்தைப் பயன்படுத்திய ஓர் ஊடக அறிக்கை பரவலானது.
அறிக்கையின் உள்ளடக்கம், மற்றவற்றுடன், இரு கட்சிகளும் ஹிஷாமுடினைப் பிரதமராக ஆதரிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது.
கோவிட் -19 காரணமாகத் தொடர்ந்து சுகாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டை காப்பாற்ற இந்தப் பரிந்துரை.
“இந்த விஷயத்தை எனது வழக்கறிஞருடன் விவாதித்த பின்னர், நான் ஒரு போலீஸ் புகார் செய்வேன்,” என்று லோரெட்டோ மேலும் கூறினார்.