கோவிட் 19 | கடந்த 24 மணி நேரத்தில் 5,793 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இன்று, 76 இறப்புகளும் சம்பவித்துள்ளன, ஜூன் மாதத்தில் மட்டும் இறப்புகளின் எண்ணிக்கை 1,048 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,844 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று 8.334 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 914 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 459 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (1,582), நெகிரி செம்பிலான் (618), சரவாக் (569), கோலாலம்பூர் (559), ஜொகூர் (504), சபா (378), கிளந்தான் (337), லாபுவான் (250), பேராக் (218), பினாங்கு (198), மலாக்கா (178), கெடா (171), பஹாங் (121), திரெங்கானு (82), புத்ராஜெயா (23), பெர்லிஸ் (5).
மேலும் இன்று, 18 கண்டறியப்பட்டுள்ளன, 10 பணியிடத் திரளைகள் மற்றும் ஆறு மத நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. பள்ளி தொடர்பான திரளைகள் எதுவும் இல்லை. ஹரி ராயா விடுமுறையில் இருந்து அனைத்து கற்றல் நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் அறிவிக்கப்பட்ட 2,462 திரளைகளில், 761 இன்னும் செயலில் உள்ளன. இன்று அறிவிக்கப்பட்ட 24 புதியத் திரளைகளும் இதில் அடங்கும்.