வாக்கு18-க்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைந்தது

வாக்கு18 இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதினெட்டு இளைஞர்கள், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வாக்கு18-ஐ செயல்படுத்துமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் விண்ணப்பத்தைத் தொடர நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர்.

நீதிமன்றத்தின் அனுமதியைக் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் கமல் முகமட் ஷாஹிட் இன்று வழங்கினார்.

இதன் பொருள், நீதிமன்றம் அனைத்து தரப்பினரின் சமர்ப்பிப்புகளின் மூலம், நீதித்துறை மறுஆய்வைக் கேட்க ஒரு தேதியை நிர்ணயிக்கும் என்பதாகும்.

ஏப்ரல் 2-ம் தேதி, வாக்கு18-ஐ நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டுமென பலர் கேட்டுகொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுகளைப் பெற அந்த இளைஞர்கள் குழு விண்ணப்பம் தாக்கல் செய்தது.

வாக்கு18 என்பது, வாக்களிக்கும் வயதை 18-க்குக் குறைப்பதற்கும், தானியங்கி வாக்காளர் பதிவை இயக்குவதற்குமான ஒரு முன்முயற்சி ஆகும்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தால், 18-லிருந்து 20 வயதுடைய 1.2 மில்லியன் இளைஞர்கள் வாக்களிக்க முடியாமல் போகலாம்.

மே 2-ம் தேதி, பிரதமர் திணைக்கள அமைச்சர் தக்கியுடின் ஹசான், இந்த ஆண்டு வாக்கு18-ஐ அமல்படுத்த அரசாங்கம் உறுதி அளித்ததாகக் கூறினார்.