நாட்டின் நிர்வாகம் தொடர்பில், மாட்சிமை தங்கியப் பேரரசரையும் மலாய் ஆட்சியாளர்களையும் அரசாங்கம் நிர்வகிக்கும் விதம் குறித்து மற்றொரு அரசியல் தலைவர் விவாதித்துள்ளார்.
இந்த முறை நாடாளுமன்றத்துடன் நேரடி தொடர்புகொண்ட ஒருவர், அதாவது பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகர் அஸலினா ஓத்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டத்துறை கல்வி பெற்ற அவர், அரச ஆணை என்பது மறுக்க முடியாத ஒன்று என்று கூறினார்.
“யாங் டி-பெர்த்துவான் அகோங் மற்றும் ஆட்சியாளர்களின் மாநாடு ஆகியவை நாடாளுமன்ற இறையாண்மை நல்லாட்சிக்கு உத்தரவாதம் அளிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளன,” என்று அவர் இன்று தனது கீச்சகத்தில் கீச் செய்துள்ளார்.
நேற்று, தேசிய அரண்மனையில், கோவிட் -19 தொற்றை எதிர்கொண்டிருக்கும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா மலாய் ஆட்சியாளர்களுடன் சிறப்பு கலந்துரையாடலை நடத்திய ஒரு நாள் கழித்து இதனை அஸலீனா வெளியிட்டுள்ளார்.
கூட்டம் முடிந்ததும், அகோங் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார், அவசரகால கட்டளைகளையும், தேசிய மீட்புத் திட்டத்தையும் மக்களைவை உறுப்பினர்கள் விவாதிக்க ஏதுவாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, மலாய் ஆட்சியாளர்கள் மன்றமும் மன்னருக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென ஓர் அறிக்கையை வெளியிட்டது.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தைத் திறக்க அரசாங்கம் மறுத்துவிட்டதைக் குறிக்கும் ஓர் எதிர்வினையில், பிரதமர் திணைக்கள அமைச்சர் தக்கியுடின் ஹசான், அகோங் அளித்த அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட தேதி இல்லை என்று உடனடியாக வாதிட்டார்.
“அகோங் எந்த மாதம் என்று சொல்லவில்லை, ஆனால் விரைவில்.
“நமது பிரதமர் கூட ஒன்பதாவது அல்லது 10-வது மாதம் என்று சொன்னார் … இப்போது நாம் கிட்டத்தட்ட ஆறாவது மாதத்தின் இறுதியை நோக்கி உள்ளோம், ஏழு, எட்டு அல்லது ஒன்பதாம் மாதம், அது நிச்சயமாக நடைபெறும்,” என்று நேற்று இரவு கூறினார்.
பிரதமர் முஹைதீன் யாசினால் நியமிக்கப்பட்ட சட்டதுறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான தக்கியுடின், பாஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார்.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில், நாடாளுமன்றத்தைத் திறக்க முஹைதீன் எடுத்த முடிவு ‘பகுத்தறிவு’ மிக்கது என்று மக்களவை சபாநாயகர் அஸார் ஹருன் கூறினார்.
தனது உரையில், அரசாங்கத்தின் அசல் நிலைப்பாட்டை மீறி நாடாளுமன்றம் திறக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து ஒரு கிராஃபிக் குறிப்பையும் அஸலினா சேர்த்துக் கொண்டார்.
“நாம் அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோமா?” என பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேள்வி எழுப்பினார்.