5,738 புதிய நேர்வுகள், நெகிரி செம்பிலானில் புதியத் தொற்றுகள் அதிகரிப்பு

கோவிட் 19 | நாட்டில் இன்று 5,738 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், நெகிரி செம்பிலானில் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான தேசியப் பதிவு விகிதம் 62.53 விழுக்காடாக இருந்தது; 23.4 மில்லியன் பெரியவர்களில் 15.52 விழுக்காட்டினர் முதல் கோவிட் -19 தடுப்பூசி மருந்தளவைப் பெற்றுள்ளனர். கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் (ஜே.கே.ஜே.வி) வலைத்தளத்தின் சிறப்பு குழுவிலிருந்து இந்தத் தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இன்று 60 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,202 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 7,530 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 441 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்று பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,858), நெகிரி செம்பிலான் (1,086), கோலாலம்பூர் (641), சரவாக் (559), ஜொகூர் (449), சபா (248), கெடா (197), மலாக்கா (184), கிளந்தான் (154), பினாங்கு (97), லாபுவான் (97), திரெங்கானு (77), பஹாங் (54), பேராக் (30), புத்ராஜெயா (7).

சுகாதார அமைச்சு தற்போது 795 செயலில் உள்ள கோவிட் -19 திரளைகளைக் கண்காணித்து வருகிறது. மே 17 வரையில், 484 திரளைகள் செயலில் உள்ளன.

இன்று 25 புதியத் திரளைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் 20 பணியிடங்கள் தொடர்பானவை.