மீண்டும் தொலைபேசி எரிந்த வழக்கு : தீவிரமாக கருதுகிறேன் – சையத் சதிக்

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான், ஒரு மாதத்திற்கு முன்னர் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய திறன்பேசி, பயன்பாட்டில் இருந்தபோது தீ பிடித்ததாகக் கூறப்படும், சமூக ஊடகப் பயனர்களில் ஒருவரின் ஸ்கிரீன் ஷாட்டை இன்று மீண்டும் பகிர்ந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்குத் திறன்பேசிகள் விநியோகிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை எளிதாக எடுத்துக் கொண்ட அரசியல்வாதிகளின் அணுகுமுறை வருத்தமளிப்பதாக சையத் சாதிக் கூறினார்.

“அரசியல்வாதிகள் அதை எளிதாக எடுத்துகொண்டு, தரமற்ற தொலைபேசிகளை மாணவர்களுக்கு வழங்கினால் இதுதான் நடக்கும்.

“இந்தத் தொலைபேசி வெடிப்புகள் சில மாணவர்களுக்கு நேர்ந்துள்ளது, இது ஆபத்தானது.

“கோழி, சார்டின் இவற்றை மாணவர்களின் கல்வியோடு ஒப்பிட விரும்புகிறீர்களா?

“இது மிகவும் மோசமானது. அரசியல்வாதிகள் திமிர்பிடித்தவர்களாக இருக்கக்கூடாது, மாணவர்களுக்குத் தரமான தொலைபேசிகளைக் கொடுங்கள்,” என்று சையத் சாதிக் தனது முகநூலில் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவம் நடப்பது முதல் தடவையல்ல, இது மாணவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. இதனால் ​​மாணவர்கள் இயங்கலை வகுப்புகளில் இணைய முடியாமல் போகிறது,” என்று அவர் சொன்னார்.

முன்னதாக, மாணவர்களின் தேவைகளுக்குச் சிறந்த, தரமான சாதனங்களைப் பேராக் மாநில அரசு வழங்கவில்லை என்று சையத் சாதிக் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

பி.டி.பி.ஆர். அமர்வுகளைச் செய்வதற்குத் தரமான சாதனங்கள் தேவைப்படும், மாணவர்கள் பயன்படுத்துவதால் தரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு சையத் சதிக் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

முன்னதாக, பேராக் மாநில அரசாங்கம், மாணவர்களின் இயங்கலை கற்றலுக்குப் பொருத்தமற்றது எனக் கூறப்படும் 20,000 திறன்பேசிகளை விநியோகித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்தத் தொலைபேசிகளை ஒய்.தி.எல். (YTL) அறக்கட்டளை நன்கொடையாக வழங்கியது. YES Altitude 3 மாடல் என அடையாளம் காணப்பட்ட அதன் விவரக்குறிப்புகளில், 5-இன்ச் திரை, 854×480 பிக்சல் ஆற்றல், 1.3GHz செயலி, 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு ஆகியவை கொண்டது என கூறப்பட்டது.

இந்தச் சாதனம் பி40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பேராக் மாநில அரசின் “துய்சென் செக்கு சாரணி” (Tuisyen Cikgu Saarani) திட்டத்தின் கீழ் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

ஒய்.தி.எல்.-இன் பங்களிப்பைத் தற்காத்த சாரணி, பொதுமக்கள் அதிகம் தேர்வு செய்பவர்களாக இருக்கக்கூடாது என்றார்.

ஒய்.தி.எல். கம்யூனிகேஷன்ஸ், இயங்கலை வகுப்பின் போது மானியமாக வழங்கப்பட்ட தொலைபேசி எரிந்து போனது என்ற அறிக்கையைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உள்ளதாகவும் நேற்று தெரிவித்துள்ளது.

உலகின் தலைமையாய நெட்வொர்க் ஆபரேட்டரான யெஸ் மற்றும் சீனா மொபைல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக, கல்வி நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திறன்பேசிகள் தொடர்பான பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி, விங் கே லீ தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் மட்டுமே தாக்குபிடித்தது

இதற்கிடையில், ஒரு கீச்சகப் பயநர் தனக்குக் கிடைத்த தொலைபேசி மூன்று நாட்கள் மட்டுமே தாக்கு பிடித்தது என அவரது விரக்தியை வெளிபடுத்தினார்.

“எனது சகோதரியின் இயங்கலை வகுப்பிற்காக, அரசாங்கத்தின் இலவசத் தொலைபேசிக்கு விண்ணப்பித்தோம். மூன்று நாட்களில் சிம்கார்டைப் பயன்படுத்த முடியவில்லை, மிகவும் மெதுவாக அது செய்ல்பட்டது,” என்றார்.

இதுபோலவே, இன்னும் பல பயனர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.