தினசரி புதிய நேர்வுகள் மீண்டும் 6,000-க்கும் அதிகமாக பதிவாகின

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,440 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஜூன் 11-க்குப் பிறகு, தினசரி பதிவு மீண்டும் 6,000-ஐ தாண்டி பதிவாகியுள்ளது.

மேலும், இன்று 74 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,276 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 6,861 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 451 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,095), நெகிரி செம்பிலான் (870), கோலாலம்பூர் (816), ஜொகூர் (592), சரவாக் (536), பேராக் (357), மலாக்கா (223), கிளந்தான் (200), சபா (199), கெடா (159), லாபுவான் (152), பினாங்கு (122), பஹாங் (79), திரெங்கானு (32), புத்ராஜெயா (6), பெர்லிஸ் (2).

மேலும் இன்று, 23 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 17 பணியிடத் திரளைகள் ஆகும்.