ஜூலை 7 முதல், 18,000-க்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்களின் சிறப்பு ஆட்சேர்ப்பு

சில மாநிலங்களில், ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க, கல்வி அமைச்சு 18,702 கல்வியாளர்களை ஒரு முறை (‘one-off’) சிறப்பு ஆட்சேர்ப்பு செய்யும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

டிஜி41 கல்வி சேவை அலுவலரின் சிறப்பு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம், ஜூலை 7 முதல் திறக்கப்படும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் கல்வியாளர்கள் அந்தந்தப் பள்ளிகளில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

“ஆசிரியர்களின் இந்தப் பெரிய அளவிலான ஆட்சேர்ப்பு, கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில், கற்பித்தல் மற்றும் கற்றல் சீராக இயங்குவதை உறுதி செய்வதோடு, சில மாநிலங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது,” என்று அவர், இன்று காலை நடந்த ஒரு சிறப்பு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, அதிக ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மாநிலங்களாக சபா, சரவாக், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் திகழ்கின்றன.

  • பெர்னாமா