1.9 மில்லியன் பேர் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை முடித்துள்ளனர் – ஆடாம்

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ், நாட்டில் இதுவரை 6,823,104 மருந்தளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார்.

டாக்டர் ஆடாம் தனது கீச்சகத்தின் மூலம், முதல் மருந்தளவை 4,924,334 பேர் பெற்றுள்ளதாகவும், அந்த எண்ணிக்கையில் 1,898,770 பேர் இரண்டாவது மருந்தளவைப் பெற்றுவிட்டதாகவும் சொன்னார்.

இதற்கிடையில், இரண்டு மருந்தளவுகளை அதிகம் பதிவு செய்த ஐந்து மாநிலங்களில் முதலிடத்தில் 251,260 பேருடன் சிலாங்கூர் உள்ளது. அதனை அடுத்து, ஜொகூர் (199,873), சரவாக் (195,607), பேராக் (173,389) மற்றும் கோலாலம்பூர் (163,987) உள்ளன.

தினசரி பிக் தடுப்பூசியில், முந்தைய நாள் 252,773 அளவுகளுடன் ஒப்பிடும்போது நேற்று 268,604 மருந்தளவுகள் வழங்கப்பட்டது என்றார்.

டாக்டர் ஆடாமின் கூற்றுப்படி, அந்த மொத்த மருந்தளவுகளில் 175,201 பேர் முதல் மருந்தளவையும், 93,403 பேர் இரண்டாவது மருந்தளவையும் பெற்றனர்.

  • பெர்னாமா