சோபா விருது விழாவில் மலேசியாகினிக்குச் சிறப்பு விருது

நேற்று இரவு, ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியப் பதிப்பாளர்கள் சங்கம் (சோபா) விருது வழங்கும் விழாவில் மலேசியாகினி சிறப்பு விருதைப் பெற்றது.

“அழுக்கு பணம்” புழக்கத்துடன் தொடர்புடைய ஃபின்சென் ஃபைல் (Fail FinCEN) திட்டத்தில் மலேசியாகினியின் ஈடுபாட்டிற்காக, ‘விசாரணை அறிக்கை சிறப்பு விருது’ எனும் அந்த மரியாதைக்குரிய விருது வழங்கப்பட்டது.

உலகெங்கிலும் இருந்து சுமார் 400 ஊடகவியலாளர்கள், சர்வதேசப் புலனாய்வு பத்திரிகை மையத்தின் (ஐ.சி.ஐ.ஜே) தலைமையில் விசாரணையில் ஈடுபட்டு, பஸ்ஃபீட் நியூஸ்க்கு (BuzzFeed News) வங்கி கோப்புகள் கசிய செய்தனர்.

23-வது வருடாந்திர நிகழ்வில், தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம், மலேசிய, இந்தோனேசிய வணிகத் துறை மற்றும் சர்வதேச வங்கிகளின் ஆதரவுடன் செம்பனைத் தொழிலில் தொழிலாளர் சுரண்டல் குறித்த அதன் செய்திக்காக, அதேப் பிரிவில் மிக உயர்ந்த விருதைப் பெற்றது – மேலும்.

மலேசியாகினி உருவாக்கிய கோவிட் -19 செல்வழி அறிக்கை, பொது சேவை இதழியல் பிரிவின் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது. இதில் ஹாங்காங் வானொலி தொலைக்காட்சி நிறுவனம் முதலிடம் பிடித்தது.

முன்னதாக ஒரு சிறப்பு உரையில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிஸேல் பேச்லெட், உலகளாவிய கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட, ஊடகங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது ஊடக சுதந்திரத்திற்கானப் போராட்டத்தை இப்போது இன்னும் முக்கியமாக்குகிறது என்றார்.

“பொது சுகாதாரக் கொள்கையின் தாக்கம் உட்பட, என்ன நடக்கிறது என்பது பற்றிய தெளிவைச் சுயாதீன ஆதாரங்களால் மட்டுமே நிறுவ முடியும்.

“முக்கியமான நிறுவனங்களின் மீதான பொது நம்பிக்கையை அழிக்கும், அரசியல் அபிலாஷைகளை அல்லது வணிக நலன்களை முன்னேற்றுவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் பொய்கள் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), ஜனவரி 2019 முதல், உலகளவில் குறைந்தது 137 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகப் பதிவு செய்துள்ளது, அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் ஆயுத மோதல்கள் நடக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர், மிஸேல் பேச்லெட்

ஆர்ப்பாட்டங்களைப் புகாரளிக்கும் போது அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள், சட்டவிரோத நிதி புழக்கம், ஊழல், சுற்றுச்சூழல் பாதிப்பு அல்லது அரசாங்கத்தின் தலையீடு போன்றவற்றை விசாரிக்கும் போது பலர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

“தற்காப்பு வலிமை கொண்டிருப்பதால் இந்த நிலைமை தொடர்ந்து உருவாகி வருகிறது,” என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட குழுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான ஈடுபாட்டினால் இந்த நிலை உருவாகிறது என்றார்.

பல ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களையும் மோசமான அவதூறு மற்றும் தேசத்துரோகப் பிரச்சாரங்களையும் இயங்கலையில் அனுபவிக்கின்றனர். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள், சிறுபான்மை மதத்தினர் மற்றும் பான்மியர் (எல்.ஜி.பி.தி.கியு.) குழுக்களைச் சார்ந்தவர்கள்.

மிஸேலின் கூற்றுப்படி, கோவிட் -19 தொற்று தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இவற்றின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல் தொடங்கிவிட்டது, நோய்த்தொற்று தற்போதுள்ள சவால்களை அதிகப்படுத்தியுள்ளது.

“கோவிட் -19 தொற்றுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆசியா உட்பட பல அரசாங்கங்கள், தேசியப் பாதுகாப்பு, அவதூறு, தேசத் துரோகம், போலி செய்திகள் அல்லது இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் தெளிவற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கண்டு வருகிறோம், சுயாதீன ஊடகங்களின் குரல் உட்பட அச்சு மற்றும் இயங்கலை வடிவிலான விமர்சனங்கள் அவற்றை மௌனிக்க வைக்கின்றன,” என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து, மலேசிய ஊடகச் சுதந்திரக் குழுக்கள், அவர்கள் தயாரித்த செய்தி அறிக்கைகளின் அடிப்படையில், காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பதிவுகள் பல உள்ளன.