5,812 புதிய நேர்வுகள், சராசரி தினசரி நேர்வுகள் குறைந்தன

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,812 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 82 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,803 பேர் பலியாகியுள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் கோவிட் -19 தொற்றினால் 2,007 பேர் இறந்துள்ளனர், அல்லது இதுவரை பதிவான மொத்த கோவிட் -19 இறப்புகளில் 41.8 விழுக்காடு இதுவாகும்.

கோவிட் -19 தொற்றினால் தினமும் சராசரியாக 80 பேர் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 3.3 பேர் இறக்கின்றனர்.

இதற்கிடையில் இன்று, 6,775 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 433 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,187), கோலாலம்பூர் (771), சரவாக் (673), நெகிரி செம்பிலான் (658), பினாங்கு (270), மலாக்கா (223), ஜொகூர் (196), கெடா (186), சபா (156), பஹாங் (139), லாபுவான் (123), கிளந்தான் (98), பேராக் (72), திரெங்கானு (46), புத்ராஜெயா (14).

மேலும் இன்று, 21 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 18 பணியிடத் திரளைகள் ஆகும்.