‘அதிகத் தடுப்பூசி விகிதங்களால், சில பிபிவி-களில் தடுப்பூசி தீர்ந்துபோனது’

பல கோவிட் -19 தடுப்பூசி மையங்கள் (பிபிவி) அதிகத் தடுப்பூசி பயன்பாட்டு விகிதங்கள் காரணமாக பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினை ஒரு சில பிபிவி-களில் மட்டுமே நடந்துள்ளது என்று கைரி கூறினார்.

“இப்போது நாம் தடுப்பூசி பயன்பாட்டின் வீதத்தை அதிகரித்து வருகிறோம். எனவே, சில பிபிவி-களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அங்குத் தற்போது இருப்பு தீர்ந்து போனது, அதேசமயம் விநியோகம் செய்ய முடியாத சூழல்.

“(ஆனால்) இது ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே, இதை மிகவும் கவனமாகத் திட்டமிடுவதன் மூலம் தவிர்க்க முயற்சிக்கிறோம்.

கோலாலம்பூர், மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (மிதெக்), இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​”ஜூலை மாதத்தில், அதிகமாக பெறப்படும் போது, இது மீண்டும் நடக்காது என்று நான் நினைக்கிறேன்.

கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடுவதைக் கண்காணிக்க, கைரி இன்று அங்கு வருகை தந்தார்.

முன்னதாக, சில மாநிலங்களில், பிபிவி-களில் போதிய இருப்பு இல்லாததால் தடுப்பூசி நியமனங்களுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பூசி போட முடியவில்லை என்று மலேசியாகினிக்குத் தகவல் கிடைத்தது.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், நியமனங்களின் படி தடுப்பூசி போடாதவர்களுக்குப் புதிய தேதி வழங்கப்படும் என்றும் கைரி கூறினார்.

இதுவரை பெறப்பட்ட எட்டு மில்லியன் மருந்தளவுகளில், ஏழு மில்லியன் மருந்தளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.