5 மாநிலங்கள் மீட்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தன

தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) கீழ், கட்டம் 2-ற்கான மூன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு வாசல் மதிப்புகளையும் ஐந்து மாநிலங்கள் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி, பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் பேராக் ஆகிய ஐந்து மாநிலங்களும் 2-ஆம் கட்டத்திற்குள் நுழைகின்றன.

இந்தத் தகவலை, மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரியும் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸும் இன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

இரண்டாம் கட்டத்திற்குள் நுழைவதற்கான முதன்மை அளவுகோல்கள், தினசரி 4,000-க்கும் குறைவான கோவிட் -19 நேர்வுகள்; தீவிரச் சிகிச்சை பிரிவின் (ஐ.சி.யூ.) படுக்கை திறன் “மிதமான” மட்டத்தில் இருப்பது; மேலும் 10 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கான நுழைவு மதிப்பு, அந்த மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

கணக்கீடு பின்வருமாறு :

காட்டப்பட்ட விளக்கப்படத்தின் அடிப்படையில், தினசரி புதிய நிகழ்வுகளைப் பொறுத்தவரை, பெர்லிஸ் 4-ஆம் கட்டத்திலும், திரெங்கானு மற்றும் சபா 3-ஆம் கட்டத்திலும் உள்ளன.

இருப்பினும், தேசியப் புனர்வாழ்வுத் திட்டத்தின்படி, ஒரு கட்ட மாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் ஐ.சி.யூ. திறன் அளவுகோல்கள் மற்றும் தடுப்பூசி விகிதங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஐந்து மாநிலங்களில், குறிப்பாக கிளந்தானிலும் திரெங்கானுவிலும், ஏப்ரல் முதல் கோவிட் -19 நேர்வுகள் கிட்டத்தட்ட 80 விழுக்காடு குறைத்துள்ளதாக ஜஃப்ருல் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூரின் தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை, பெரும்பாலும் மற்ற எல்லா மாநிலங்களையும் பாதிக்கின்றது, எனவே மாற்றம் குறித்த அறிவிப்பு அந்தந்த மாநில அரசுகள் சார்ந்து இருப்பது மிகவும் சிறந்தது என்று இஸ்மாயில் கூறினார்.

இரண்டாம் கட்டத்திற்கான செந்தர இயங்குதல் நடைமுறைகளின் (எஸ்ஓபிக்கள்) மாற்றங்களில், நீண்ட காலம் பிரிந்திருக்கும் தம்பதிகள், அவசரநிலைகள் அல்லது பிறப்பு உள்ளிட்ட சிறப்பு சூழ்நிலைகளில் பயணம் செய்ய அல்லது புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்க உதவ, காவல்துறையின் அனுமதியுடன் மாவட்டங்கள் அல்லது மாநிலங்கள் எல்லைகளைக் கடக்கலாம்.

3-ஆம் கட்டத்திற்கு மாறுவதற்கான அறிகுறிகளுக்காகவும், மற்ற மாநிலங்கள் 2-ஆம் கட்டத்திற்குச் செல்வதற்கும் ஐந்து மாநிலங்களிலும் குறிகாட்டிகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றார்.

பி.கே.பி.டி.யின் கீழ் உள்ள பகுதிகள் உட்பட, அனைத்து பகுதிகளிலிருந்தும் தடுப்பூசி மையங்களுக்குப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் இஸ்மாயில் வலியுறுத்தினார், ஒரு வாகனத்தில் மூன்று பேர் நெகிழ்வுத்தன்மையுடன், இ-ஹெயிலிங் பயனர்கள் மற்றும் முதியவர்கள் அல்லது ஊனமுற்றோருடன் வரும் டாக்ஸிகளுக்கும் அனுமதி உண்டு.