மனிதக் கடத்தல் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது – மனித உரிமை குழு

அமெரிக்க வெளியுறவுத்துறையின், மனிதக் கடத்தல் அறிக்கை (Trafficking in Persons திஐபி) 2021-இல், 3-வது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மலேசியாவின் தரவரிசை குறித்து, ஹக்காம் மனித உரிமை குழு (மனித உரிமைகள் சங்கம்) தனது கவலையை வெளிப்படுத்தியது.

திஐபி அறிக்கையில், நிலை 3 என்பது மிகக் குறைந்த மட்டமாகும், மேலும் கட்டாயத் தொழிலாளர் செயல்பாடுகள், மலேசியாவின் வீழ்ச்சிக்குக் காரணமான குற்றங்களின் முக்கிய வடிவமாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று அமெரிக்கக் கடத்தல் கண்காணிப்பு மற்றும் மனிதக் கடத்தல் எதிர்ப்பு அலுவலகத்தின் செயல் இயக்குநர் கரி ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

ஹக்காம் துணைத் தலைவர் எம் இராமச்செல்வம்

“மனிதக் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒழிப்பதற்கும் மலேசிய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், இது கொடூரமானக் குற்றங்களில் ஒன்றாகும்,” என்று ஹக்காம் துணைத் தலைவர் எம் இராமச்செல்வம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“திஐபி 2021 அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே அடையாளம் காணத் தவறியது, நிறுவனங்களுக்கு இடையேயான போதிய ஒருங்கிணைப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கான போதிய சேவைகள், கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவும் மற்றும் கடத்தல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழல் மற்றும் அதிகாரிகள் ஆகியவற்றைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

மனிதக் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் அகற்றுவதற்கும், ஒரு திறமையான மற்றும் பயனுள்ள முறையை அமல்படுத்த வேண்டும், அதற்கு தற்போதுள்ள அணுகுமுறையைப் புதுப்பிக்க வேண்டுமென அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“ஆவணமற்ற, மாநிலமற்ற, அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் உள்ளிட்ட புலம்பெயர்ந்தோருக்கு, அவர்களின் உரிமைகள் நன்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் மனிதக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆளாகாமல் இருப்பதற்கும் அரசாங்கம் பொருத்தமான சட்ட மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

“இதனைப் பகிரங்கப்படுத்துவதோடு, சுயாதீன வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மைக் குழு (2019) அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

கரி ஜோன்ஸ்டன்

அறிக்கையில் ஒரு முக்கியப் பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ள பணியமர்த்தலுக்கான கடுமையான கொடுப்பனவுகளை உள்ளடக்கியக் கடன் அடிப்படையிலான வற்புறுத்தலைச் சமாளிக்க வேண்டுமென்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

‘கட்டாய உழைப்பு’ மலேசியாவில் ஆதிக்கம் செலுத்தும் மனிதக் கடத்தல் குற்றமாக தி.பி.ஐ. 2021 அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. மலேசியாவில், “ஏராளமாகப் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் இரண்டு மில்லியன் ஆவணங்கள் கொண்ட தொழிலாளர்களும், அதைவிட அதிக எண்ணிக்கையிலான ஆவணமற்ற தொழிலாளர்களும் உள்ளனர்”.

‘கட்டாய உழைப்பு’ கூறுகள், செம்பனை தோட்டங்கள், விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஆகியத் துறைகளில் காணப்படுகின்றன என்று ஜோன்ஸ்டன் கூறினார்.