நேற்று, டுரியான் விவசாயிகள் மற்றும் அமலாக்கப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அரச மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்) பொது செயல்பாட்டுப் படை (பி.ஜி.ஏ) பஹாங், ரவுப்பிற்கு அணிதிரட்டியது.
காவற்படை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், முறையான சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் பி.டி.ஆர்.எம். கேட்டுக்கொள்கிறது என்றார்
டுரியான் விவசாயிகளின் நில அத்துமீறல் பிரச்சினை, ரவுப் மாவட்ட நில அலுவலகம் மற்றும் பஹாங் வனத்துறை ஆகியவற்றின் அதிகார வரம்பு மற்றும் விவகாரங்களின் கீழ் உள்ளது என்றார் அவர்.
“கடமையில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அங்குள்ள பிஜிஏ (ரவுப்) பொறுப்பு ஆகும், கடமையில் இருக்கும் அதிகாரிகளைத் துன்புறுத்த முயற்சிப்பவர்களுடன் பி.டி.ஆர்.எம். சமரசம் செய்யாது,” என்று, இன்று கோலாலம்பூரில், செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
- பெர்னாமா