இன்று தொடங்கும், கடன் ஒத்திவைப்பு விண்ணப்பங்களை வங்கிகள் ஏற்கத் தயாராக உள்ள நிலையில், மலேசியத் தேசிய வங்கி (பிஎன்எம்) கடன் வாங்கியவர்களுக்கு இந்த நடவடிக்கை அவர்களின் கடன்களின் ஒட்டுமொத்தச் செலவை அதிகரிக்கக்கூடும் என்பதை நினைவூட்டுகிறது.
பணம் செலுத்துதல் தாமதமாகும்போது, கூட்டு வட்டி – அல்லது ஏதேனும் தண்ட வட்டி ஆகியவற்றை வங்கி வசூலிக்காது என்று பிஎன்எம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளில் வட்டி / இலாபம் இன்னும் திரட்டப்படுகிறது (திரட்டப்பட்டுள்ளது அல்லது படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது).
“தவணை செலுத்துதல் மற்றும் நிதியளிப்பு காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வங்கிகள் கடன் வாங்கியவர்களுக்குத் தகவல்களை வழங்க வேண்டும்.
“கடன் வாங்கியவர்கள் தற்காலிகக் கடன் ஒத்திவைப்புக்குப் பிறகு (அசல் கட்டணத்துடன் ஒப்பிடும்போது) பராமரிக்க குறைந்த கட்டணங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்த நிதி காலம் நீண்ட காலத்திற்கு நீட்டிக்கப்படும்,” என்று அது கூறியது.
இதன் பொருள் ஆறு மாதக் கால அவகாசத்தின் போது, முதன்மைக் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படும்.
இது பிற்கால மாதாந்திரக் கொடுப்பனவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பது வங்கியைப் பொறுத்தது, ஆனால் அது இன்னும் கடனின் ஒட்டுமொத்தச் செலவை அதிகரிக்கும்.
இதற்கிடையில், மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுவாழ்வு தொகுப்பின் (பெமுலே) கீழ், தற்காலிகத் தடைக்குத் தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் என்று பி.என்.எம். கூறியது.
கூடுதலாக, மாதாந்திரக் கட்டணக் குறைப்புக்கள் மற்றும் நிதித் திட்டமிடல் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட பிற தொகுப்புகளையும் வங்கி வழங்குகிறது.
ஒப்புதல் தானாக வழங்கப்படும் மற்றும் கடன் வாங்கியவர்கள் துணை ஆவணங்களைச் சேர்க்கத் தேவையில்லை.
இது அவர்களின் மத்தியக் கடன் குறிப்பு தகவல் அமைப்பு (சி.சி.ஆர்.ஐ.எஸ்.) பதிவுகளையும் பாதிக்காது.
கடன் வாங்கியவர்கள் இயங்கலையில் அல்லது வங்கியை அழைத்து விண்ணப்பிக்கலாம், கூடுதலாக வங்கிக் கிளைகளுக்கும் நேரில் செல்லலாம் என்று பிஎன்எம் தெரிவித்தது.
இந்த உதவி ஜூலை 1-க்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்களுக்குப் பொருந்தும்; மேலும் கடன் வாங்கியவருக்கு 90 நாட்களுக்கு மேல் நிலுவைத் தொகை இருக்கக்கூடாது அல்லது விண்ணப்பிக்கும்போது திவால் நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கக் கூடாது.
90 நாட்களுக்கு மேல் நிலுவைத் தொகை உள்ளவர்கள் திருப்பிச் செலுத்தும் உதவி மற்றும் இலவச நிதி ஆலோசனையை வழங்கும் கடன் ஆலோசனை மற்றும் மேலாண்மை நிறுவனத்தைத் (ஏகேபிகே) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வங்கிகளில் சிரமங்களை எதிர்கொண்டாலோ அல்லது அவர்களின் தவணைக் கொடுப்பனவுகள் நியாயமற்ற முறையில் அதிகரித்திருந்தாலோ, அதைத் தொடர்பு கொள்ளுமாறு பிஎன்எம் கடன் வாங்கியவர்களைக் கேட்டுக்கொண்டது.