முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோர் துணை பிரதமராகவும், மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இருப்பினும், அம்னோ உச்சமன்றச் செயற்குழு கூட்டம், இன்றிரவு ஒரு முடிவை எடுக்கும் என்று அந்தப் பெக்கான் எம்.பி. சொன்னார்.
“கடன் வாங்கியவர்களுக்கு அதிகச் சுமை இல்லாமல் அல்லது ஐ-சித்ரா திட்டத்தில் அதிகரிப்பு என, கோவிட் நோய்த்தொற்றுக்கு நல்ல அறிவிப்புகள் வரும் என நினைத்தால், துணைப் பிரதமர் (திபிஎம்) மற்றும் ஒரு புதிய மூத்த அமைச்சரின் நியமனம் குறித்து அறிவிப்பு வந்துள்ளது.
“அமைச்சர்களைப் பொறுத்தவரை, இந்தப் புதிய நியமனம் 8-வது பிரதமரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
“இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
“எதுவாக இருந்தாலும், இன்று இரவு அம்னோ உச்சமன்றச் செயற்குழு கூட்டத்தின் முடிவு என்ன என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம்,” என்று அவர் கூறினார்.
அம்னோ, அதன் இரு தலைவர்களையும் இந்த நியமனங்களை ஏற்க அனுமதிக்குமா என்பது இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை.
இன்று காலை, திபிஎம் பதவிக்குத் தாங்கள் பரப்புரை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் என்று, அம்னோ இளைஞர் தலைவர், அசிராஃப் வாஜ்டி டுசுக்கி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
“அம்னோ உச்சமன்றச் செயற்குழு, திபிஎம் பதவியை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள நிலையில், அதற்காக எப்படி பரப்புரை செய்யும்,” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
உறுதியற்றத் தன்மை மேலும் மோசமாகலாம்
இதற்கிடையில், சிலாங்கூர் தேசியக் கூட்டணி தகவல் பிரிவுத் தலைவர் இஷாம் ஜலீல், திபிஎம் நியமனத்தை அம்னோ ஏற்றுக்கொண்டால் அரசியல் உறுதியற்றத் தன்மை பெரிதாக மாறாது அல்லது மோசமடையாது என்றார்.
“நாட்டை ஆளத் தவறிய பெர்சத்துவுக்கு, அம்னோ இன்னும் தலைவணங்க வேண்டியிருக்கும், மேலும் அம்னோவில் உள் பிரச்சினைகள் தோன்றி, பிளவுகளை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
“தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் தோல்வியுற்றக் கொள்கைகள் தொடரும், மேலும் இந்தக் கொள்கைகளின் தோல்வியை மக்கள் தொடர்ந்து அனுபவிப்பார்கள்.”