மரியாதையுடன் பதவி விலகுமாறு முஹைதீனை அம்னோ வலியுறுத்தியது

பிரதமர் முஹைதீன் யாசினுக்கு அளித்த ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெற அம்னோ நேற்று இரவு முடிவு செய்தது.

முந்தைய தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் ஏழு தோல்விகளின் அடிப்படையில், அம்னோ உச்ச மன்றம் (எம்.தி.) இந்த முடிவை எடுத்ததாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

எனவே, அஹ்மத் ஜாஹித் கூறுகையில், ஒரு புதியப் பிரதமரை நியமிக்க அனுமதிக்கும் வகையில், மரியாதையுடன் பதவி விலகுமாறு அம்னோ முஹைதீனை வலியுறுத்தியது.

“புதிய பிரதமரின் பதவிக்காலம், தொற்றுநோய் காலத்தில் மக்கள் நலனுக்கு உதவும் முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தும், கோவிட் -19 தொற்றை சாமாளித்தல், தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு செயல்முறைகளை விரைவுபடுத்தப்படுவதை உறுதிசெய்யும்.

“மந்தை நோய்த்தடுப்பை வெற்றிகரமாக அடைந்த பின்னர், புதியப் பிரதமர் உடனடியாக யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு, 15-வது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆணையை மக்களுக்கு ஒப்படைக்க அறிவுறுத்த வேண்டும்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் தோல்விகளில், கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் தோல்வி, அவசரநிலையைத் துஷ்பிரயோகம் செய்தல், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கத் தவறியது, அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை நிர்வகிக்கத் தவறியது மற்றும் அகோங்கின் உத்தரவுகளை விமர்சிப்பது ஆகியவை அடங்கும்.

அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்-ஐ, தனது துணைத் தலைவராக நியமிப்பதாக முஹைதீன் அறிவித்த 12 மணி நேரத்திற்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டது, அதே நேரத்தில் ஹிஷாமுடின் ஹுசைன் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அன்வர் பிரதமர் வேட்பாளர் அல்ல

இதற்கிடையில், அஹ்மத் ஜாஹித் கூறுகையில், அன்வர் இப்ராஹிமைப் பிரதமராக நியமிக்கும் அல்லது டிஏபி-பி.எச். அரசுக்கு ஆதரவு வழங்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை நேற்றிரவு எம்.தி. கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

கடந்த அம்னோ பொது மாநாட்டில், முடிவு செய்யப்பட்டபடி இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்றார் அவர்.

அம்மாநாட்டின் போது, தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து அம்னோ விலகும்போது, அம்னோ அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அஹ்மத் ஜாஹித் கூறினார்.

இருப்பினும், இஸ்மாயில் மற்றும் பிற அமைச்சர்கள் இராஜினாமா செய்ய வேண்டுமா அல்லது நேர்மாறாக இருக்க வேண்டுமா என்பது குறித்து நேற்று இரவு அஹ்மத் ஜாஹித் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

துணைப் பிரதமராக இஸ்மாயில் நியமனம் என்பது அம்னோவை அமைதிப்படுத்தவும் அவரது நிர்வாகத்தைப் பராமரிக்க நேரத்தைத் தாமதப்படுத்தவும் முஹைதீன் எடுத்த முயற்சி என்று நம்பப்படுகிறது.

38 அம்னோ எம்.பி.க்களும், நேற்றைய அம்னோ உச்ச மன்ற முடிவுக்குக் கட்டுப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலோர் இஸ்மாயில் மற்றும் ஹிஷாமுடினுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படுகிறது.

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர், நஸ்ரி அஜீஸ் முஹைதீனுக்கு அளித்த ஆதரவைத் தொடர்ந்து, அரசாங்கத்திற்கான ஆதரவை தவிர்த்து நாடாளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்ய அம்னோவுக்கு இரண்டு எம்.பி.க்கள் தேவை.

அம்னோவின் மூன்று எம்.பி.க்களின் ஆதரவைத் திரும்பப் பெற்றால், பிரதமருக்குச் சிறுபான்மை ஆதரவு கிடைக்கும்.

அம்னோ உச்சமன்றக் கூட்டம், நேற்று இரவு 8.30 மணிக்கு, மெய்நிகரில் கிட்டத்தட்ட நள்ளிரவு 12.30 வரை தொடர்ந்தது.