நேற்று, 324,745 மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இது நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையை இப்போது 11,075,493 மருந்தளவுகளாகக் கொண்டு வந்துள்ளது.
இன்று, ஒரு கீச்சகப் பதிவில், சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, அந்த மொத்த தினசரி மருந்தளவில், 213,971 முதல் மருந்தளவு என்றும் 110,774 இரண்டாவது மருந்தளவு என்றும் கூறினார்.
நேற்று, அதிகத் தடுப்பூசி விநியோகத்தைப் பதிவு செய்த ஐந்து மாநிலங்களில், சிலாங்கூர் 78,081 பேருடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சரவாக் (62,241), கோலாலம்பூர் (46,695), பேராக் (24,067), நெகிரி செம்பிலான் (19,563) ஆகியவை உள்ளன.
நேற்றைய நிலவரப்படி, முதல் மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசி நிர்வாகத்தின் மொத்த எண்ணிக்கை 7,649,848 ஆகவும், இரண்டாவது மருந்தளவு 3,425,645 ஆகவும் இருந்தன.
- பெர்னாமா