நேற்று, 424,541 தடுப்பூசி மருந்தளவுகளுடன், நாட்டில் தினசரி கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள், 400,000-க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
திங்களன்று, தினசரி தடுப்பூசிகள் 421,479 மருந்தளவுகளாக இருந்தன.
நேற்று, 260,286 முதல் மருந்தளவுகளும், 164,255 இரண்டாவது மருந்தளவுகளும் வழங்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா ஒரு கீச்சகப் பதிவில் கூறினார்.
52,551 இரண்டாவது மருந்தளவு தடுப்பூசிகளுடன், சரவாக் மிக உயர்ந்த அளவிலான தடுப்பூசிகளைப் பெற்ற மாநிலமாக உள்ளது, அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (25,696), கோலாலம்பூர் (23,707), சபா (9,864), பினாங்கு (7,195) மற்றும் பஹாங் (7,038) உள்ளன.
இதற்கிடையில், பிப்ரவரி 23-ஆம் தேதி, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்) செயல்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டில் வழங்கப்பட்ட மொத்த கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12,212,730 மருந்தளவுகளாகும் என்று டாக்டர் ஆதாம் கூறினார்.
- பெர்னாமா