சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) ஒப்பந்த ஊழியர்கள் எனும் விஷயத்தில், சுகாதார அலுவலர்கள் மீது மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்தக்கூடாது என்பதே பொது சேவை ஊழியர்கள் சங்கத்தின் (கியூபெக்ஸ்) கருத்தாகும்.
அதன் தலைவர் அட்னான் மாட், எம்ஓஎச் மட்டுமின்றி, பிற அமைச்சுகளிலும் பல்லாயிரக்கணக்கான பணிகள் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன, அவற்றின் சேவை நிறுத்தப்படுவதற்காகக் காத்திருக்கின்றன.
“எம்ஓஎச்-இல், ஒப்பந்த அடிப்படையிலான சுகாதார அதிகாரிகள் தவிர, தாதியர், உதவி மருத்துவ அதிகாரிகள், சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள், பொது சுகாதார உதவியாளர்கள், சமூகத் தாதியர், ஊடுகதிர் தொழில்நுட்பவியலாளர்கள், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்று முக்கியமான பல பணிகள் உள்ளன.
“இவர்களுக் முக்கியமான துறையில் உள்ளனர், இவர்கள் மீதும் அரசாங்கத்தால் சம கவனம் செலுத்தப்பட வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நாட்டில் கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்துள்ள நிலையில், ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணிகளை வழங்குமாறு அக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியதால், அவர்களின் பிரச்சினை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இரண்டு தனித்தனி பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டன, அதாவது ஒப்பந்த மருத்துவர்கள் ஹர்த்தால் இயக்கம் ஜூலை 26-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இயங்கலையில் நடத்தப்பட்ட கோட் பிளாக் (கருப்பு குறியீடு) பிரச்சாரம்.
இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று ஜூலை 12-ம் தேதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.
இதற்கிடையில், பொது சுகாதாரச் சேவைகளை வழங்குவதில், மருத்துவர்களைப் போன்று, தாதியர் மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் போன்ற பிற ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அட்னான் கூறினார்.
அரசாங்கம் எதிர்கொள்ளும் செலவுக் காரணிகள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் நிரந்தர அந்தஸ்து முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது, ஏனெனில் இது இப்போதும் எதிர்காலத்திலும் அவசியமான ஒரு பணியாகும் என்று அவர் மேலும் கூறினார்.