தேசிய மீட்புநிலை கட்ட அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை – முகமது

நாட்டை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் இப்போது நடக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசான் கூறினார்.

அரசாங்கத்தால் கட்டங்கட்டமாக அறிவிக்கப்படும் செய்திகளுக்காகக் காத்திருக்காமல், இதனைச் செயல்படுத்த வேண்டும், அதே நேரத்தில் மனிதர்களை அச்சுறுத்தும் அக்கிருமி இனி என்றென்றும் நம்முடனேயே இருக்கும் என்ற உண்மையை ஏற்கத் தயாராக வேண்டும் என்றார்.

தடுப்பூசிகளை முடித்த 17 விழுக்காட்டினருக்கு, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

சம்பந்தப்பட்ட குழுக்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள… வேலை செய்யவோ, படிக்கவோ, மாவட்ட எல்லைகலைக் கடக்கவோ அல்லது இறுக்கமான மற்றும் தெளிவான நெறிமுறையுடன் வியாபாரம் செய்யவோ அனுமதிக்க வேண்டும் என்றார் மொஹமட்.

அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே, இந்தச் செயல்முறைகளைத் தொடங்க வேண்டுமென்று அதிகாரிகள் சொல்லக்கூடாது என்று முகமது மேலும் கூறினார்.