நேற்று, தேசியப் பாதுகாப்பு மன்றம் வழங்கிய புதிய செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) ஏற்ப, பேரங்காடிகள் இப்போது தங்கள் வளாகத்தின் சில பகுதிகளை மட்டும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், “ஆடை, அலங்காரங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள் பிரிவு தவிர” மற்றப் பகுதிகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் முதல் அல்லது இரண்டாம் கட்டத்தில் இருந்தாலும், அனைத்து மாநிலங்களுக்கும் அல்லது பகுதிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
இதற்கிடையில், பகல்நேர பராமரிப்பு மையங்கள், அவற்றின் செயல்பாடுகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் குழந்தைப் பராமரிப்பு வசதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இதற்கிடையில், மழலையர் பள்ளி, நர்சரிகள், பகல்நேரப் பராமரிப்பு மையங்கள், தனியார் மழலையர் பள்ளி, சர்வதேச மற்றும் வெளிநாட்டு தனியார் பள்ளிகளில் மழலையர் பள்ளி, 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கான மன மேம்பாட்டு மையங்களும் புதிய எஸ்ஓபிகளை எதிர்கொள்கின்றன.
புதிய எஸ்ஓபி–க்களின் படி, பெற்றோர்கள் முனைமுகப் பணியாளர்களாக அல்லது முக்கியச் சேவை துறைகளில் பணியாற்றுபவர்களாக இருந்தாலொழிய, மற்ற குழந்தைகளுக்காகச் செயல்பட அவர்களுக்கு அனுமதி இல்லை.
முன்னதாக இந்தத் தடை 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, மழலையர் பள்ளி மற்றும் மன மேம்பாட்டு மையங்களுக்கு மட்டுமே பொருந்தும்.