12,528 புதிய நேர்வுகள், 138 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில், இன்று மதியம் வரையில், 12,528 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வழங்கிய முறிவில், இன்றைய நேர்வுகளில் 6,840 (54.6 விழுக்காடு) அறிகுறியற்றவை, 5,468 (43.6 விழுக்காடு) பேருக்கு சிறிய அறிகுறிகள் இருந்தன.

மேலும், 112 பேருக்கு நுரையீரல் வீக்கம் இருந்தது, 44 பேருக்கு உயிர்வளி தேவைப்பட்டது, 64 பேர் ஆபத்தான நிலையில் இருந்ததோடு, அவர்களுக்கு வென்டிலேட்டர்கள் தேவைபட்டன என்றார்.

இந்த முறிவின் அடிப்படையில், அறிகுறியற்றவர்கள் அல்லது சிறிய அறிகுறிகளைக் கொண்டவர்கள் மோசமடைய மாட்டார்கள் என்று அர்த்தமல்ல, மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மீள மாட்டார்கள் என்றும் அர்த்தமல்ல என்றும் அவர் சொன்னார்.

மேலும், இன்று 138 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,866 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 6,629 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 425 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (4,985), கோலாலம்பூர் (1,740), நெகிரி செம்பிலான் (1,280), கெடா (701), சபா (647), ஜொகூர் (625), மலாக்கா (569), பேராக் (428), பினாங்கு (396), சரவாக் (388), பஹாங் (317), கிளந்தான் (211), திரெங்கானு (177), புத்ராஜெயா (41), லாபுவான் (22), பெர்லிஸ் (1).