தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டத்திற்குச் சென்ற பினாங்கு, சரவாக் மற்றும் பஹாங் ஆகிய மாநிலங்கள் அரசாங்கம் நிர்ணயித்த அளவுகோல்களை இன்னும் பூர்த்தி செய்யவில்லை.
பிபிஎன்-இன் இரண்டாம் கட்டத்திற்கு மாநிலத்தை நகர்த்துவதற்கு, மூன்று குறிகாட்டிகளைக் கடைபிடிக்கப்பட வேண்டும், அதாவது சராசரியாக ஏழு நாட்கள் கோவிட் -19 நேர்வுகள் நிர்ணயிக்கப்பட்ட வாசல் மதிப்பிற்குக் கீழே இருத்தல், தீவிரச் சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ.) படுக்கைகள் பயன்பாட்டு விகிதம் மிதமான மட்டத்தில் இருத்தல் மற்றும் இரண்டு மருந்தளவு தடுப்பூசி விகிதம் 10 விழுக்காட்டைப் பூர்த்தி செய்தல்.
பினாங்கு, சரவாக் மற்றும் பஹாங்கில், ஏழு நாட்களுக்குச் சராசரியாக, தினசரி தொற்றுகள் அரசாங்கம் நிர்ணயித்த வாசல் மதிப்பை மீறியது.
மூன்று மாநிலங்களிலும், புதியக் கோவிட் -19 நேர்வுகள் கடந்த ஏழு நாட்களாக அதிகரித்துள்ளன. பினாங்கு மற்றும் சரவாக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.
பஹாங்கில், சராசரியாக ஏழு நாள் நேர்வுகள் வாசல் மதிப்பை விட 156 விழுக்காடு அதிகரித்துள்ளது.
முன்னதாக, நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், 2-ஆம் கட்டத்திற்கு நகர்ந்த மாநிலங்கள் இனி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், முதல் கட்டத்திற்குத் திரும்பாது என்று கூறினார்.
மறுபுறம், சில இடங்கள் அல்லது பகுதிகள் மட்டுமே இறுக்கமான இயக்கக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பி.கே.பி.டி.) உட்படுத்தப்படும், முழு மாநிலமும் அல்ல.
பிபிஎன்-இன் இரண்டாம் கட்டம், மேலும் சில வணிகத் துறைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கிறது.