மக்களவை கூட்டத்திற்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்

முந்தைய அமர்வுக்குச் செய்ததைப்போல, 80 எம்.பி.க்கள் மக்களவையில் இருக்கலாமா என்பது குறித்த முடிவு, அடுத்த வாரம் ஜூலை 26-ஆம் தேதி சிறப்பு அமர்வு தொடங்குவதற்கு முன்பு முடிவு செய்யப்படும்.

மக்களவை துணை சபாநாயகர் மொஹமட் ரஷீத் ஹஸ்னோன், இந்த விவகாரம் அந்தந்த அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுடன் விவாதிக்கப்படும் என்றார்.

கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கை இது என்று, பத்து பாஹாட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

“கோவிட் -19 ஸ்கிரீனிங் சோதனையை முதலில் நடத்துவது உட்பட, கடுமையான எஸ்ஓபி-க்களுடன் இரண்டு அல்லது மூன்று ஊழியர்களை உடன் கொண்டுவருவதற்கு ஒவ்வொரு அமைச்சருக்கும் துணை அமைச்சருக்கும் அனுமதி வழங்கப்படும்,” என்று இன்று, ஜொகூர் பாரு, ஸ்தூலாங் லாவோட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முந்தைய சட்டசபை அமர்வில், 80 எம்.பி.க்கள் – அரசாங்கத்திலிருந்து 41 பேர், 39 எதிர்க்கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் – மட்டுமே அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர், இருப்பினும் அனைத்து எம்.பி.க்களும் வாக்களிப்பு அமர்வின் போது சட்டசபையில் நுழைய முடியும்.

தற்போது, கோவிட் -19 நேர்மறை வழக்குகள் ஐந்து இலக்கங்களைப் பதிவு செய்துள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து, மக்களவை அமர்வில் ஈடுபட்டுள்ள அனைவரும் எஸ்ஓபிக்கு இணங்க வேண்டும் என்றும் மொஹமட் ரஷீத் சொன்னார்.

  • பெர்னாமா