தியாகத் திருநாள் வாழ்த்து

ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் மலேசியாகினி தனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நோய்த்தொற்று காலத்தில், பிற உயிர்காக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தத் தூய்மையானவர்களை, இத்தியாகத் திருநாளில் நினைவில் கொள்வோம்.

நமது மகிழ்ச்சிக்காக, நிறைவான நமது வாழ்க்கைக்காக … யார் யாரோ, எங்கெங்கோ, தினம் தினம் அவர்களின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்துகொண்டிருக்கின்றனர் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுவோம்.