நவம்பர் 8 இல் நடைபெற்ற மைஸ்கில்ஸ் அறவாரியம் மற்றும் பப்ளிக் வங்கி இணைந்து நடத்திய முதல் சமூக பொறுப்புணர்வு (CSR) நிகழ்ச்சி மிகுந்த வெற்றி பெற்றது. 45 உற்சாகமான பப்ளிக் வங்கி ஊழியர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்றனர்.
மைஸ்கில்ஸ் தலைமை அதிகாரி திரு. தேவா வரவேற்புரை வழங்கினார். “இந்த கூட்டாண்மை இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் எங்கள் நோக்கத்தை வலுப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து பப்ளிக் வங்கி தன்னார்வலர்கள் எங்கள் மாணவர்களுடன் இணைந்து மூன்று 3 குழுக்களாகினர். முதல் குழுவில் நிதி கல்வி பட்டறைக்காக 9 வங்கி பணியாளர்களும், 25 மாணவர்களும் இரண்டாவது குழுவில் சமையல் சவால்களிற்காக 10 வங்கி பணியாளர்களும், 25 மாணவர்களும் மூன்றாவது குழுவில் தோட்டக்கலை அமர்விற்காக 16 வங்கி பணியாளர்களும் 20 மாணவர்களும் இணைந்தனர்.
மாணவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு, தன்னார்வலர்களுடன் மதிப்புமிக்க அனுபவங்களைப் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் கலை நிகழ்ச்சி வழங்கினர், பப்ளிக் வங்கி பங்கேற்ற அனைத்து மாணவர்களிற்கும் பரிசுகளை வழங்கினர்
மைஸ்கில்ஸ் அறக்கட்டளை இந்த கூட்டு முயற்சிக்காக பப்ளிக் வங்கிக்கு நன்றி தெரிவித்தது. “இது வெறும் தொடக்கமே. இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இன்னும் பல திட்டங்கள் வரவிருக்கின்றன!” என்று அறக்கட்டளை தெரிவித்தது.