நாடாளுமன்றத்தில் தேசியக் கூட்டணி (பி.என்.) அரசுக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகத் துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினாலும், உண்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று அன்வர் இப்ராஹிம் கருத்து தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுப்படி, இஸ்மாயில் சப்ரி கூறும் ஆதரவின் செல்லுபடியை மக்களவையில் சோதிக்க வேண்டும், அதன் மூலம் மட்டுமே அது உண்மை எனக் கருதப்படுகிறது.
இஸ்மாயில் சப்ரிக்குச் சட்டம் தெரியும், அவர் மக்களவையில் சோதனை (ஆதரவு சோதனை) செய்ய வேண்டும்.
முன்னதாக, பிஎன் தலைமைக்கு நாடாளுமன்றத்தின் 222 உறுப்பினர்களில் 110 பேரின் ஆதரவு இன்னும் உள்ளது என்றார் இஸ்மாயில்.
இதற்கிடையில், போர்ட்டிக்சன் எம்.பி.யான அன்வர், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டாலும், காலை 10 மணிக்கு மக்களவையில் அவர்கள் இருப்பார்கள் என்று வலியுறுத்தினார்.
“அமர்வு திங்களன்று வழக்கம் போல் நடைபெறும் என்று சபாநாயகரிடமிருந்து ஓர் உத்தரவாதத்தைப் பெற நாங்கள் விரும்புகிறோம்.
“சபாநாயகரின் அணுகுமுறை நம்பிக்கையுடன் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் குறைந்தபட்சம் அவர் ஓர் உறுதிமொழியைக் கொடுத்தார். அனைத்து எம்.பி.க்களையும் காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு நாங்கள் கூறியுள்ளோம்.
அது தவிர, நேற்று, சபாநாயகர் அஸார் அஜீசன் ஹருனுடன் தனது தரப்பு கூட்டம் நடத்தியதாகவும், சபாநாயகரின் முடிவை எதிர்ப்பதாகவும் கூறிய அன்வார், மக்களவை அமர்வைப் பல முறை ஒத்திவைப்பதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேலி செய்வதாக உள்ளது என்றார்.