அமைச்சரவை கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் அமல்படுத்தப்பட்ட அவசரச் சட்டங்களை இரத்து செய்வது குறித்து, 2021 சுயாதீன அவசரக்காலச் சிறப்பு குழுவின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை.
வட மலேசியப் பல்கலைக்கழகத்தின் கொள்கை விவகாரங்கள், பொருளாதார அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள், சர்வதேச ஆய்வுகளுக்கான மைய மூத்த விரிவுரையாளர், டாக்டர் எம்.டி.சுக்ரி ஷூயிப், இந்தக் குழு இந்த விஷயத்தில் ஆலோசனை வழங்குவதில் தற்காலிகமானது என்று கூறினார்.
“இந்த விஷயத்தில், நிர்வாகியின் பணி, சுயாதீனக் குழுவை விட முக்கியமானது, மேலும் குழுவை நியமிப்பவர்கள் சுயேட்சைக் குழுவின் சேவைகளைப் (ஆலோசனை) பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது அவர்களைப் பொறுத்தது.
“இந்தக் குழு நிரந்தரமானது அல்ல, பெயர் கூட ஒரு தற்காலிகக் குழு, அவர்களின் கருத்து தேவைப்பட்டால் அவர் அதை எடுத்து கொள்ளலாம். தேவைப்படாவிட்டால் அவர்களின் கருத்துக்களை ஏற்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது,” என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
2021 அவசரகாலச் சிறப்பு குழுவில், அவரது நியமனம் பயனற்றது என்று பெர்லிஸ் முஃப்தி, முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது, சுக்ரி இவ்வாறு கூறினார், என்று விவரித்தார்.
அவரைப் பொறுத்தவரை, நியமனம் பயனற்றது எனக் கருதப்படும் பிரச்சினை எழக்கூடாது, அது தற்போதைய நிலைமையைப் பரபரப்பாக்குவதாகும்.
மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் (யூகேஎம்) அரசியல், அறிவியல் திட்டத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜமாய்யி ஹாமில், அமைச்சரவையின் அதிகார வரம்பு எந்தக் குழுவையும் விட உயர்ந்தது என்றும்; சட்டத்தின் படி முடிவுகளை எடுக்க அவர்களுக்கு அதிக உரிமை உண்டு என்றும் கூறினார்.
“இந்த விஷயத்தில், பிரதமரும் அவரது அமைச்சரவையும் அதிகார வரம்பின் அடிப்படையில் சரியான முடிவை எடுத்துள்ளனர், தங்கள் கருத்துக்களை முதலில் பெற வேண்டும் என்று அமைச்சரவை நினைப்பதால் மட்டுமே இந்தப் பிரச்சினை எழுகிறது,” என்று அவர் கூறினார்.
அதிகார வரம்பில், நிர்வாகத்தின் அடிப்படையில், பிரதமருக்கு நிர்வாக அதிகாரங்கள் இருப்பதாகவும், மாமன்னர் என்பது சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கான மக்களின் கீழ்ப்படிதலின் அடையாளமாகும் என்றும் ஜமாய்யி விளக்கினார்.
நிர்வாகத்தின் அடிப்படையில், பிரதமர் மற்றும் அவரது சபையின் ஆலோசனையை மாமன்னர் பின்பற்ற வேண்டும், இது நாட்டில் வழக்கமாக நடைமுறையில் உள்ளது.
“மலேசியாவில் இதுவரை நடைமுறையில் இருப்பதுபடி, யாங் டி-பெர்த்துவான் அகோங் பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
“எனினும், தற்போது நாட்டில் அரசியல் நிலைத்தன்மை குறைவாக இருப்பதால், அகோங்கிற்கு முழுமையான அதிகாரம் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், இந்தக் கருத்து மற்றும் புரிதல் முற்றிலும் தவறானது, ஏனெனில் பிரதமரின் நிர்வாகம் மிகவும் முக்கியமானது மற்றும் சக்தி வாய்ந்தது,” என்று அவர் கூறினார்.