கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில், தேர்தலை ஒத்திவைக்க சரவாக்கில் உள்ளூர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சரவாக் அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) அரசாணை 2021, நேற்று, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது, அது ஆகஸ்ட் 2 முதல் நடைமுறைக்கு வரும்.
பிப்ரவரி 2, 2022 வரை, ஆறு மாதங்களுக்கு இந்த உள்ளூர் அவசர அறிவிப்பு அமலில் இருக்கும்.
சரவாக்கிற்கு அறிவிக்கப்பட்ட அவசரநிலை, நாடு முழுவதும் அவசரநிலை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முடிவடைகிறது.
மாமன்னரும் பிரதமரும் கையெழுத்திட்ட பிரகடனத்தில், தேசிய அவசரநிலை முடிவடைந்த 60 நாட்களுக்குள், சரவாக் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். எனவே, மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்க உள்ளூர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.