அவசரக்காலச் சட்டம் குறித்து வணிகக் குழு விளக்கம் கோரியது

கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில் நடைபெறும் வணிகம் தொடர்பான விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு, வணிகக் குழுக்களின் கூட்டணி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.

ஏனென்றால், அவர்களின் கூற்றுப்படி, ஜூலை 21-ம் தேதி, மாமன்னரின் ஒப்புதலைப் பெறாமல் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், குற்றங்கள் மற்றும் தண்டங்களின் நிலை குறித்து பல விஷயங்கள் தெளிவாக இல்லை.

116 வர்த்தகச் சங்கங்களின் கூட்டணியான இண்டஸ்ட்ரீஸ் யுனைட், தங்களுக்கு அரசியல் விவகாரங்களில் தலையிட எந்த எண்ணமும் இல்லை, ஆனால் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டது.

இண்டஸ்ட்ரீஸ் யுனைட் அரசியலற்றது, நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் அறிக்கைகளால் எழுப்பப்படும் அரசியல் பிரச்சினைகளில் தலையிட நாங்கள் விரும்பவில்லை, அவசரக் காலங்களில் செய்யப்பட்ட பல்வேறு விதிமுறைகளால் பல வணிகங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதைத் தவிர, சட்ட நடவடிக்கை உட்பட, அரசு உடனடியாக இதைத் தீர்க்க வேண்டும், ஜூலை 21, 2021 முதல் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் மீதான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உட்பட.

“தெளிவுபடுத்தும் அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு, பிரதமரை நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று இண்டஸ்ட்ரீஸ் யுனைட் நிறுவனர்கள் டேவிட் குருபாதம் மற்றும் இர்வின் எஸ்.டபிள்யூ. சியோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

யுனைட் இண்டஸ்ட்ரீஸின் பிரதிநிதி, நிலைமை குழப்பமாக இருப்பதாகக் கூறினார்.

“இன்னும் வர்த்தமானி செய்யப்படவில்லை என்று தெரிகிறது, எனவே இந்தக் கட்டளை இன்னும் இயங்குகிறது,” என்று அவர்கள் கூறினர்.