பிப்ரவரி 24 முதல் நேற்று வரையில், தேசியக் கோவிட் -19 தடுப்பூசி திட்டம் (பிக்) மூலம் மொத்தம் 21,200,473 மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் உறுதியளிப்பு சிறப்பு குழு (ஜெ.கே.ஜே.எ.வி) கீச்சகத்தில் ஒரு விளக்கப்படப் பகிர்வு மூலம், 14,247,659 பேர் முதல் மருந்தளவு தடுப்பூசியையும், 6,952,814 இரண்டாவது மருந்தளவு தடுப்பூசியையும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விழுக்காட்டின் படி, நாட்டின் மக்கள்தொகையில் 43.6 விழுக்காட்டினர் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 21.3 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியின் இரணடு மருந்தளவுகளையும் முடித்துள்ளனர்,” என்று ஜே.கே.ஜே.வி. தெரிவித்துள்ளது.
தினசரி தடுப்பூசிக்கு, நேற்று மொத்தம் 480,122 மருந்தளவுகள் வழங்கப்பட்டன, 298,236 முதல் மருந்தளவுகள், 181,886 இரண்டாவது மருந்தளவுகள்.
- பெர்னாமா