கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் ஜலான் கிளாங் லாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது காவல் அதிகாரிகள் இரு பெண்களிடமிருந்து பல வகையான போதைப் பொருள்களை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்படி இருபெண்களும் 31 மற்றும் 35 வயது கொண்டவர்கள் ஆவர். இருவருமே
குற்றப் பதிவு கொண்டவர்கள் ஆவர். இருவரில் ஒரு பெண் கிட்டதட்ட 10 வருடம் போதைப் பொருள் விற்கும் விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியப்பட்டது என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் பாஸ்ரி சகோனி தெரிவித்தார்.
அந்த திடீர் சோதனை நடைப்பெற்றபோது காவல் அதிகாரிகள் 2997 கிராம் கொண்ட 1480 ஹெரோயின் பொட்டலங்களும் மற்றும் 261 கிராம் கொண்ட 250 கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றினர்.
மேலும் விசாரணைப்படி கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் 1730 நபர்களுக்கு விற்கப்படக் கூடிய அளவிலிருந்ததாக அவர் கூறினார்.
மற்ற சின்டிகெட் நபர்களை கண்டுபிடிக்க மேலும் இந்த விசாரணை தொடரும் என்று அவர் கூறினார்.