அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் முஹைதீனுக்கு எதிராக

பிரதமர் முஹைதீன் யாசின் தலைமைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றத் தங்கள் நிலைப்பாட்டை, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று மீண்டும் வலியுறுத்தினர்.

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்களுடன், பெர்துபோஹான் கினாபாலு ப்ரோகெரசிப் பெர்சத்து (உப்கோ), சரவாக் பெர்சத்து கட்சி (பிஎஸ்பி) மற்றும் சுயேச்சைகள் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் இந்த விஷயம் கூறப்பட்டது.

நேற்று, அரசாங்கத்தின் பல எம்.பி.க்கள் மஹியட்டினுக்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த பின்னரும், தனக்கு இன்னும் பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்று கூறுவதில் சாத்தியமில்லை.

“மஹியட்டினும் அவரது முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் எனும் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் முகமது சாபு; டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்; வில்ஃபெரட் மேடியஸ் தங்காவ் (உப்கோ); பாரு பியான் மற்றும் மாசிர் குஜாத் (பி.எஸ்.பி.) ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

இந்தக் குழுவுக்கு, 222 எம்.பி.க்களில் 92 பேரின் ஆதரவு உள்ளது.

பெஜுவாங், மூடா மற்றும் வாரிசான் சபா கட்சி ஆகியவை ஒரு தனி அறிக்கையை வெளியிட்டனர்.

இதற்கிடையில், பெஜுவாங் தகவல் பிரிவு தலைவர், உல்யா அகாமா ஹுசாமுதீன், முஹைதீனுக்கு ஆதரவாக பெஜுவாங் எந்த உறுதிமொழியிலும் கையெழுத்திடவில்லை என்று கூறினார்.

பிரதமரையும் அவரது அமைச்சரவையையும் பதவி விலகுமாறு அக்கட்சியின் எம்.பி.க்கள் கடுமையாக கேட்டுக் கொண்டதாக வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் கூறினார்.

பெஜூவாங், வாரிசான் மற்றும் மூடா ஆகியவை 13 நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளன.

மேற்கண்ட அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டால், அவர்களிடம் 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நேற்று, முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பின் போது தோன்றிய 11 அம்னோ எம்.பி.க்களுடன் இணைந்து, மேற்கண்ட அனைத்து கட்சிகளும் மக்களவையில் 116 இடங்களைக் கொண்டுள்ளன.