ஜொகூர் மக்களுக்காக கோவிட் தடுப்பூசிகளை ஏற்பாடு செய்ய கூறுகிரார் ஜோகூர் சுல்தான்

ஜோகூர் மாநில அரசராகிய சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் தனது மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசி போடும் விகிதத்தைக் கண்டு தனது வருத்தத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் இருதியாக இதேபோன்ற கருத்தை ஜூன் 23 அன்று வெளியிட்டார்.

‘’தடுப்பூசியை வழங்குவதற்காக நான் நினைவுறுத்த வேண்டுமா?’’ என்று ஒரு அறிக்கையில் நேற்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

“ஜோகூர் சுல்தானாகிய, நான் என் மக்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு உண்டு.

“நான் எப்பொழுதும் என் மக்களைப்பற்றி , குறிப்பாக கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுபவர்களையும்  மற்றும் காலமானவர்களையும்  பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

‘’நம் நாட்டில் கோவிட் வைரஸ் மக்களிடையே  மிகவும் வேகமாகப் பரவிக்கொண்டு வருகின்றது. இந்த பிரச்சனைக்கான ஒரே தீர்ப்பு முடிந்தவரைக்கும் அரசாங்கம் மக்களுக்கு  விரைவாகத் தடுப்பூசி போட வேண்டும், “என்று அவர் மாநில ராயல்  பிரஸ் அலுவலக சந்திப்பில் கூறினார்.