உயர்க்கல்வி அமைச்சர் நொரைய்னி அஹ்மட், இன்று தனது அமைச்சரவை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
அமைச்சரவைப் பதவியிலிருந்து விலகிய ஆக சமீபத்திய அம்னோ உறுப்பினர் அவர் ஆவார்.
தேசியக் கூட்டணி அரசு மற்றும் பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெற, அம்னோ உச்சமன்றம் எடுத்த முடிவுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நொரைய்னி கூறினார்.
“மத்திய அரசில், உயர்க்கல்வி அமைச்சராகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இருப்பினும், ஆகஸ்ட் 3, 2021-ஆம் தேதி, அம்னோ உச்சமன்றச் செயற்குழுவின் முடிவின் அடிப்படையில், அம்னோ மகளிர் தலைவரான நான், கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு, உயர்க்கல்வி அமைச்சர், மத்திய அரசின் அமைச்சரவை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன், இது உடனடியாக அமலுக்கு வருகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.