இன்று பிற்பகல் வரையில், 19,257 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இது மொத்த தொற்றுநோய் எண்ணிக்கையை 1,243,852-ஆக உயர்த்தியுள்ளது.
நான்கு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கு 2,450 நேர்வுகளுடன், அதிக தினசரி எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள நிலையில், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் 7,084 நேர்வுகள் பதிவாகியுள்ளன.
பல மாநிலங்களில், நேர்வுகளின் தினசரி எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இன்று 210 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 10,389- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 16,323 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,097 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 575 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 7,084 (458,450), கோலாலம்பூர் – 2,450 (138,521), ஜொகூர் – 1,182 (99,144), சபா – 1,255 (92,456), சரவாக் – 573 (80,747), நெகிரி செம்பிலான் – 884 (77,637), கெடா – 1,514 (54,988), பினாங்கு – 959 (51,674), கிளந்தான் – 930 (48,563), பேராக் – 774 (43,063), மலாக்கா – 414 (35,058), பகாங் – 714 (28,523), திரெங்கானு – 425 (20,098), லாபுவான் – 2 (9,709), புத்ராஜெயா – 56 (4,415), பெர்லிஸ் – 41 (806).
மேலும் இன்று, 36 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.