கோவிட் -19 தொற்றுக்கு எதிராக, முழுமையாகத் தடுப்பூசி பெற்ற தனிநபர்களுக்கான தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளைப் பிரதமர் முஹைதீன் யாசின் இன்று அறிவித்தார்.
முழு அளவிலான தடுப்பூசி பெற்றவர்களுக்கான சில வசதிகள் இதோ:-
தேசிய மீட்புநிலை திட்டக் கட்டத்தைப் (பிபிஎன்) பொருட்படுத்தாமல், அனைத்து மாநிலங்களுக்கும் :-
1) மலேசியாவுக்குத் திரும்பும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படலாம். அவர்களுக்கு மலேசியாவில் வீடு இருக்க வேண்டும்.
2) தொலைதூரத்தில் வசிக்கும் தம்பதிகள் சந்திக்க மாநிலங்கள் / மாவட்டங்களைக் கடக்கலாம்.
3) 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளைச் சந்திக்க, பெற்றோர் மாநிலங்கள்/ மாவட்டங்கள் முழுவதும் பயணம் செய்யலாம்.
4) எஸ்.ஓ.பி.களுடன் மசூதிகள், வழிபாட்டுத் தளங்களுக்கு அனுமதி.
தேசிய மீட்புநிலை திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் அதற்கு மேல் :-
1) மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதி.
2) உணவகங்களில் சாப்பிட அனுமதி.
3) சமூக இடைவெளியுடன், (காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) வெளிப்புற உடற்பயிற்சிகளுக்கு அனுமதி.
4) பிபிஎன் இரண்டாம் கட்டம் மற்றும் அதற்கு மேல் உள்ள மாநிலங்களில் சுற்றுலா அனுமதி.
புதிய விதிகள் ஆகஸ்ட் 10 (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று முஹைதீன் கூறினார்.
இந்நடவடிக்கைகள் பற்றிய துள்ளியமான விவரங்கள், விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், கெடா, ஜொகூர், மலாக்கா மற்றும் புத்ராஜெயா தவிர, அனைத்து மாநிலங்களும் பிபிஎன் -இன் இரண்டாம் கட்டத்தில் உள்ளன.
பதிவுக்காக, ஒருவர் இரண்டாவது மருந்தளவு பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அல்லது ஒரு மருந்தளவு தடுப்பூசிக்கு 28 நாட்களுக்குப் பிறகு முழுமையான தடுப்பூசி பெற்றவராகக் கருதப்படுகிறார்.