திபிஎம் : எல்லைகள் கடக்க நெகிழ்வுத்தன்மை, குடும்ப உறவுகளுக்குப் பயனளிக்கும்

நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, இரண்டு மருந்தளவுகள் தடுப்பூசி முடித்த தனிநபர்கள், தொலைதூரத்தில் இருக்கும் தங்கள் இணையைச் சந்திக்கவும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சந்திக்க பெற்றோர்களுக்கும் மாவட்ட, மாநில எல்லைகளைக் கடப்பதற்கான நெகிழ்வுத்தன்மை, நாட்டில் குடும்ப உறவுகளுக்கு பெரிதும் பயனளிக்கும்.

துணைப் பிரதமர், இஸ்மாயில் சப்ரி யாகோப், வளரும் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து நீண்ட காலம் பிரிக்கக் கூடாது என்று கூறினார்.

“இரண்டு மருந்தளவுகள் தடுப்பூசி பெற்றவர்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல, ஆகஸ்ட் 10 முதல் மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

“18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சந்திக்க விரும்பும் பெற்றோர்களுக்கும் இது பொருந்தும்,” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறினார்.

தனது சமூக ஊடக கணக்கில் பகிரப்படும் அனைத்து கருத்துகளும், அனைத்து தரப்பினரின் பரிந்துரைகளும் குறைகளும் அடுத்தக் கூட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று இஸ்மாயில் சப்ரி உறுதியளித்தார்.

“ஓரளவிற்கு அது நம் அனைவருக்கும் உதவும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா