நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 28.3 விழுக்காடு அல்லது 9,246,295 பேர், நேற்று வரையில் இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை முடித்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
தனது அதிகாரப்பூர்வ கீச்சகத்தில், ஒரு விளக்கப்படத்தைப் பகிர்ந்து, 16,119,916 பேர் முதல் மருந்தளவைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இதன்வழி, நேற்றைய நிலவரப்படி, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டம் (பிக்) மூலம் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 25,366,211 மருந்தளவுகளாகப் பதிவு செய்துள்ளது.
“அந்த விழுக்காட்டின் படி, நாட்டில் பெரியவர்களில் 68.9 விழுக்காட்டினர் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 39.5 விழுக்காட்டினர் தங்களின் முழு அளவிலான கோவிட் -19 தடுப்பூசி மருந்தை முடித்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், தினசரி தடுப்பூசிகள் மொத்தம் 357,891 மருந்தளவைப் பதிவு செய்துள்ளன, 160,320 முதல் மருந்தளவாகவும், 197,661 இரண்டாவது மருந்தளவாகவும் பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும், கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை வழங்கும் ‘பிக்’ திட்டம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட்டது.
- பெர்னாமா