கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,780 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நேர்வுகளைப் பதிவுசெய்துள்ள நிலையில், மற்ற ஆறு மாநிலங்கள் 1,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.
செயலில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது நான்கு விழுக்காடு குறைந்துள்ளது.
மேலும், இன்று 211 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 11,373- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 17,973 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,053 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 546 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 6,921, கோலாலம்பூர் – 2,065, ஜொகூர் – 1,693, கெடா – 1,534, சபா – 1,514, பினாங்கு – 1,385, கிளந்தான் – 1,284, நெகிரி செம்பிலான் – 1,015, சரவாக் – 634, பேராக் – 828, மலாக்கா – 636, திரெங்கானு – 613, பகாங் – 585, பெர்லிஸ் – 29, புத்ராஜெயா – 4, லாபுவான் – 3.
மேலும் இன்று, 31 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 16 சமூகப் பரவலுடன் தொடர்புடையது, 18 பணியிடத் திரளைகள் ஆகும்.