மக்களவையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தேசியக் கூட்டணி (பிஎன்) பிறக் கட்சி தலைமைகலுடன் ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார்.
மக்களவையில் பிரதமருக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்க, பிஎன்-க்கு வெளியே உள்ள கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்க நாங்கள் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளோம்.
“தற்போதைய ஆணையை மக்களுக்கு வழங்குவதற்காக, தேர்தலுக்குப் பொருத்தமான நேரம் வரும் வரை, தொற்றுநோயை நிர்வகிக்க இது உதவும்,” என்று அவர் கூறினார்.