அதிகமான வேலை வாய்ப்புகளைக் காப்பாற்றுவதற்காக, நாடு எதிர்கொண்டிருக்கும் சுகாதார நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ஜோமோ க்வாமே சுந்தரம் கூறினார்.
கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகள், தங்கள் நாட்டின் சுகாதார நெருக்கடியை நன்றாக கையாளுகிறார்கள், மலேசியா அதனைக் கற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் வேண்டும் என்று ஜோமோ கூறினார்.
“புத்ராஜெயாவில் இருக்கும் எவரும், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் சில, மலேசியாவை விட ஏழ்மையானவை, ஆனால் அவர்கள் நிலைமையைச் சிறப்பாக கையாளுகிறார்கள்.
‘அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி : மலேசியாவின் எதிர்காலம் என்ன?’ என்றத் தலைப்பில், 5-வது மனிதப் பொருளாதார கருத்துரையாடல் தொடரில், “அபாயகரமான சூழ்நிலை இன்னும் தீர்க்கப்படவில்லை, என்றாலும் அவர்கள் தொடர்ந்து விழிப்புடன் செயல்படுகிறார்கள், நாமும் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
சுகாதார அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டிய ஜோமோ, அறிவிக்கப்பட்ட இலக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தொற்றுக்குள்ளான மற்றும் அறியப்படாத மற்ற மூன்று தனிநபர்கள் இருக்கலாம், உண்மையான தொற்றுநோய்களின் எண்ணிக்கை நான்கு மடங்காககூட இருக்கலாம்.
இதற்கிடையில், சுகாதாரம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளைப் பாதிக்கும் வகையில் குறுகிய கால அரசியல் ஏற்பாடுகள் அல்லது கணக்கீடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது என்று அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், பெரும் ஆபத்து உள்ளது. பொருளாதார ரீதியாக, பெரும்பாலான வளரும் நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும், ஆனால் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பாது.
“ஒருவேளை, ஏற்கனவே ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவுகள் மந்தநிலையில் தொடரும்,” என்று அவர் கூறினார்.
இந்தப் பிரச்சனைக்கு வழிவகுத்த காரணங்களில், மருந்துகளின் அதிக விலை, ஆய்வகச் சோதனைகள், சுகாதார உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவை உலகின் பெரும்பாலான மக்களால் வாங்க முடியாத நிலையில் உள்ளன என்று ஜோமோ கூறினார்.
உதாரணமாக, உலகளாவியக் கோவிட் -19 தடுப்பூசி ஒதுக்கீடு திட்டம் (கோவாக்ஸ்), மலேசியா போன்ற நடுத்தர வருவாய் நாடுகளைப் போல தடுப்பூசி வாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே.
“இதனைப் பார்த்தால், தடுப்பூசிகளை வாங்க முடியாத நாடுகளும் உள்ளன. இது நாட்டில் தொற்றுநோய் தொடர்ந்து பரவி, பிற மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்பளிக்கும்.
“இது அபாயகரமானது, டெல்டா மாறுபாடு போன்ற புதிய மாறுபாடுகள் தோன்றக்கூடும், அப்போது நம்மால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.
மேலும், பெரும்பாலான வளரும் நாடுகளால் இதற்காக செலவழிக்க முடியாது என்பதே மற்றொரு காரணம் என்றார்.
“வளரும் நாடுகளுக்குச் செலவழிப்பது கடினம், எனவே அவர்கள் எப்போதும் ‘வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டும்’ என்று நினைக்கிறார்கள்.
“பொருளாதாரம் புத்துயிர் பெறுவது அல்லது வெளியில் இருந்து கடன் பெறுவது முக்கியம் அல்ல, ஆனால் பொருளாதாரம் நகரும் வகையில் போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்கு, உள்ளே இருந்து கடன் வழங்குவது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
தற்போதைய அரசியல் கொந்தளிப்பு பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.