நேரடி செய்தி : அகோங் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, யாங் டி -பெர்த்துவான் அகோங், இன்று பிற்பகல் 2 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார்.

பிற்பகல் 1.30 : ஆதாரங்களின்படி, அகோங் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொருவராக அல்ல.

இந்தச் சந்திப்பில் யார் பிரதமராக பதவியேற்பார் என்பது குறித்து ஏதேனும் முடிவு வருமா என்பது நிச்சயமற்றது.

அனைத்து எம்.பி.க்களும் அரண்மனைக்கு, ஒரு கடிதம் எழுதி நாளை மாலை 4 மணிக்குள் தங்களுக்கு விருப்பமானப் பிரதமரைத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.45 – அரண்மனைக்கு வந்த அரசியல் தலைவர்களில், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இருந்தார்.

ஆஸ்ட்ரோ அவானி, பெர்சத்து அதன் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஜைனுதீன் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்வார், கட்சியின் தலைவர் முஹைதீன் அல்ல என்று செய்தி வெளியிட்டது.

பிற்பகல் 1.58 – பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம், அமானா தலைவர் முகமது சாபு மற்றும் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி உட்பட, மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அரண்மனைக்கு வந்தார்கள்.

இதற்கிடையில், போர்னியோ போஸ்ட், மன்னருடனான இன்றையச் சந்திப்பில் ஜிபிஎஸ் கட்சியும் கலந்துகொள்ளும் என்று அறிவித்தது.

பிற்பகல் 3 – பிகேஆர் தலைவர் போதுமான ஆதரவைப் பெற முடிந்தால், வாரிசான் அன்வர் இப்ராகிமை ஆதரிக்கும் என்று செபங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் அஸிஸ் ஜமான் கூறினார்.

“(ஆனால் நாங்கள்) பக்காத்தான் ஹராப்பான் அன்வர் போதுமான அளவு ஆதரவைப் பெறத் தவறினால் (111), அவரை மறுக்கும் உரிமையை (வாரிசான் தலைவர்) ஷாஃபி அப்டலுக்கு அன்வர் வழங்குவார் என்று நம்புகிறேன்,” என்று வாரிசான் இளைஞர் பிரிவு தலைவர் தனது கீச்சகம் மூலம் கூறினார்.