முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதற்கு அம்னோ ஓர் உடன்பாட்டை எட்டியதாகக் கூறப்படுகிறது.
அம்னோ வட்டாரங்களின்படி, கோலாலம்பூரில் இப்போது நடந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் விளைவாக இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் முகாம் உட்பட, இஸ்மாயில் சப்ரிக்கு அனைத்து, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கும் என்று அம்னோ ஆதாரங்கள் கூறின.
அம்னோவில் பிளவுகளைத் தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், அம்னோ உச்சமன்றச் செயற்குழு உறுப்பினர், அர்மாண்ட் அஸா அபு ஹனிஃபா, முகநூல் பதிவு ஒன்றில், அந்தப் பெரா எம்.பி.க்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
அது உண்மையாகிவிட்டால், அம்னோ துணைத் தலைவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற இந்த எண்ணிக்கை போதுமானதாக இருக்கும்.
இதற்கிடையில், அம்னோவின் ஒப்புதலுடன் முடிவு பற்றி கேட்டபோது, அஸலினா ஓத்மான் “ஆம்” என்றார்.
இதற்கிடையில், செம்புராங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் ஹுசைன், தற்போது தான் முன்னுரிமை அளிக்க விரும்புவது, நாட்டின் அரசியல் நிலைத்தன்மை என்றும், யாங் டி-பெர்த்துவான் அகோங் எடுக்கும் முடிவு அச்சூழ்நிலையை உருவாக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும், மிக முக்கியமான பிரச்சினையில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
நேற்றிரவு அம்னோ எம்.பி.க்களுக்கிடையேயான சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது, ”அரசியல் விளையாட்டுகள் போதும்,” என்றார்.