அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமராக ஆதரிக்கவும் பரிந்துரைக்கவும் பாஸ் இன்று ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது.
பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், கட்சி பிரமாண அறிக்கையுடன் (எஸ்டி) தயாராகி வருவதாகக் கூறினார்.
“பாஸ் ஒருமனதாக இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்கிறது, நாங்கள் சில நாட்களுக்கு முன்பாகவே எஸ்டியை முடித்துவிட்டோம்,” என்று இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் சுருக்கமாகக் கூறினார்.
முன்னதாக, மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்த முஹைதின் யாசினுக்குப் பதிலாக, பெரா நாடாளுமன்ற உறுப்பினரை அம்னோ ஒருமனதாக ஆதரித்ததாகக் கூறப்பட்டது.
15 அம்னோ எம்.பி.க்கள் முஹைதீனின் தலைமைக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து தேசியக் கூட்டணி (பிஎன்) அரசு கவிழ்ந்தது.
பாஸ், கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முவாஃபாகாட் நேஷனல் கூட்டணியை உருவாக்கிய அம்னோவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.